Category: செய்திகள்
நஷ்டஈடும் இறப்புச் சான்றிதழும் வேண்டாம்!” — OMP நிகழ்வைப் புறக்கணித்து யாழில் கண்டனப் போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைத்து சுயாதீனமான சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணியொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியப் பேரவை மற்றும் குடிசார் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணி, செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகி, கோவில் வீதி வழியாக நகர்ந்து முத்திரைச் சந்தியிலுள்ள கிட்டு பூங்காவைச் (சங்கிலியன் பூங்கா) சென்றடைந்து பொதுக் கூட்டத்துடன் நிறைவடையும். பேரணியின் முக்கிய கோரிக்கைகள்: சர்வதேச நீதி விசாரணை: செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேசக் கண்காணிப்பு மற்றும் நீதி விசாரணை பொறிமுறையை உருவாக்குதல். இனப்படுகொலைக்கு நீதி:…
மாணவி கிருஷாந்தியின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் – செம்மணியில் உணர்வுபூர்வ அஞ்சலி!
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி குமாரசுவாமி கிருஷாந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கடந்த செப்டம்பர் 07-ஆம் திகதி செம்மணி நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி, அவரது தாய், சகோதரன் மற்றும் அயலவர் ஆகியோரின் நினைவாக இந்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்கள், கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு உரிய நீதியும் பொறுப்புக்கூறலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையும் பரிகார நீதியும் கிடைக்கப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற அநீதிகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக் கூடாது என்றும் நினைவேந்தலில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
பருத்தித்துறை இராணுவ முகாம்களை அகற்றக் கோரி செப்டெம்பர் 11இல் போராட்டம்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றக் கோரி எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி கவனயீர்ப்புப் போராடமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரின் அபிவிருத்தி மற்றும் விரிவாக்கத்திற்குத் தடையாகக் காணப்படும் இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்றுவதுடன், பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதை வலியுறுத்தும் வகையில் இடம்பெற உள்ளது. இப்போராட்டம் பருத்தித்துறை துறைமுக சந்தியில் ஆரம்பமாகும் இப்போராட்டம், பேரணியாகச் சென்று பிரதேச செயலகத்தைச் சென்றடையவுள்ளது. இப்பகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் ஒன்றிணைந்துக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதிக்கான நீள்பயணம் – யாழில் இடம்பெற்ற பேரணி மற்றும் மாநாடு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள்பயணம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு 30.08.2026 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டை முன்னிட்டு, யாழ்ப்பாண நகரில் கவனயீர்ப்பு பேரணியும் இடம்பெற்றது. பேரணியின் முன்னிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் சென்றதுடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர். பின்னர் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், ரவிகரன் ஆகியோரும் உள்ளுராட்சி சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் கலந்துகொண்டனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், காணாமல்…
13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான கிட்டுபூங்கா பிரகடனம்!
13ஆம் திருத்தத்திற்குள் தமிழர்களின் அரசியல் தீர்வை முடக்கும் முயற்சிக்கு எதிராகப் பேரணி தமிழர்களின் அரசியல் தீர்வை 13ஆம் திருத்தச் சட்டத்திற்குள் முடக்கும் சதிக்கு எதிராகவும், தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வை வலியுறுத்தியும் நடைபெற்ற பேரணி, பல ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உரிமைக்கான எழுச்சியாகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பமான பேரணி, கிட்டு பூங்கா வரை சென்று நிறைவடைந்தது. கிட்டு பூங்கா பிரகடனம் ‘தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ என்ற நோக்கத்துடன், தமிழ் மக்களினதும் வெகுஜன அமைப்புக்களினதும் பங்கேற்புடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 2022 ஜனவரி 30ஆம் திகதி கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது,…
தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் – 2017
அரசியல் தீர்வாக இரண்டு தேசங்கள் இணைந்த ஒரு நாடு. வடக்கு கிழக்கை பாராம்பரிய தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றைக் கொண்டிருப்பதனால் ஒரு தேசமாக உள்ளனர். ஒரு தேசத்திற்குரிய மக்களுக்கு பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையும், தனித்துவமான இறைமையும் உண்டு. மக்கள் கூட்டம் என்பது சிறுபான்மை இன மக்களையும், தேசமாக உள்ள மக்களையும் குறிப்பதால் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தினை கேள்விக்குட்படுத்தக்கூடிய வகையில் மக்கள் கூட்டம் என அழைப்பது பொருத்தமற்றது. தமிழ் மக்கள் தாம் ஒரு தேசம் என்பதற்கான ஆணையை 1956ம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் வெளிப்படையாக வழங்கி வருகின்றனர். தேசம் என்ற அந்தஸ்த்தினை அவர்கள் இதுவரை விட்டுக் கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் மறுபக்கத்தில் சிங்கள தேசத்தின் செயற்பாடுகள் பேரினவாதத்தின் உச்சத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில் தமிழ்…
கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டன? நிலாந்தன் கட்டுரை!
படைப்புலனாய்வாளர்கள் அரசியல் கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு வருவது கடந்த 14 ஆண்டு கால தமிழரசியலில் புதியது அல்ல. ஏன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களின் பின் அங்கேயும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது.பொதுவாக படைப்புலனாய்வுத்துறை எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை புலனாய்வு செய்வதற்கு மாறு வேடங்களிலும் வரும். அல்லது வெளிப்படையாகவும் வரும் 2009க்கு பின் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட்டங்களில்,ஏன் இலக்கிய கூட்டங்களில்கூட படைப்புலனாய்வுத்துறை வெளிப்படையாக தன் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது உண்டு.வொய்ஸ் ரெக்கோர்டரை வெளிப்படையாகவே அங்குள்ள ஒலிபெருக்கி பெட்டிகளின் மீது வைப்பதுண்டு. ஊர்வலங்களின் போதும் ஆர்ப்பாட்டங்களின் போதும் அவர்கள் சகஜமாக வந்து நிற்பார்கள். 2009 க்கு பின்னரான சில கவன ஈர்ப்பு போராட்டங்களில் அதிக தொகையாக அவர்களே நின்றதும் உண்டு. அதில் இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று,கண்காணிப்பது.இரண்டு, அச்சுறுத்துவது.எனவே அரச புலனாய்வுத்துறை ஒரு கட்சியின் அரசியல் கூட்டத்திற்கு வந்தமை என்பது…
கஜனின் உரை: ஓரு இனமாகத் திரள்வது?
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார் ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்து வாக்களித்தது. டெலோ இயக்கம் எதிர்த்து வாக்களித்தது. ஏனைய கூட்டமைப்புப் பிரதிநிதிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. விமர்சனங்களோடும் இந்த ஒற்றுமை பரவலாகப் பாராட்டப்படுகிறது. கஜேந்திரகுமார் ஒரு இனத்தின் குரலாக அந்த இடத்தில் நின்றார். அதை ஆதரித்து…
Meet Her There
Lorem ipsum dolor sit amet, eu sit appetere expetendis. Ad nam eros eius vocent. Vim id probo illum. Ex duo quando fabulas expetenda, sit ea officiis delicatissimi, cum esse aliquip facilis at. Unum natum justo has ne, vis an esse vulputate adipiscing. Prima inani affert an sea, eam numquam incorrupte in. Alia nonumy omnium vim te, ea vix ullum platonem prodesset, cu ipsum decore deserunt vel. Ad pri alia choro veritus, eum iusto ludus eu. In veniam diceret omittam sed. At solet complectitur sea, per at mollis mediocritatem. Id pri…
