செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைத்து சுயாதீனமான சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணியொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியப் பேரவை மற்றும் குடிசார் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணி, செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகி, கோவில் வீதி வழியாக நகர்ந்து முத்திரைச் சந்தியிலுள்ள கிட்டு பூங்காவைச் (சங்கிலியன் பூங்கா) சென்றடைந்து பொதுக் கூட்டத்துடன் நிறைவடையும். பேரணியின் முக்கிய கோரிக்கைகள்: சர்வதேச நீதி விசாரணை: செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேசக் கண்காணிப்பு மற்றும் நீதி விசாரணை பொறிமுறையை உருவாக்குதல். இனப்படுகொலைக்கு நீதி:…
Author: Editor
மாணவி கிருஷாந்தியின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் – செம்மணியில் உணர்வுபூர்வ அஞ்சலி!
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி குமாரசுவாமி கிருஷாந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கடந்த செப்டம்பர் 07-ஆம் திகதி செம்மணி நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி, அவரது தாய், சகோதரன் மற்றும் அயலவர் ஆகியோரின் நினைவாக இந்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்கள், கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு உரிய நீதியும் பொறுப்புக்கூறலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையும் பரிகார நீதியும் கிடைக்கப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற அநீதிகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக் கூடாது என்றும் நினைவேந்தலில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
பருத்தித்துறை இராணுவ முகாம்களை அகற்றக் கோரி செப்டெம்பர் 11இல் போராட்டம்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றக் கோரி எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி கவனயீர்ப்புப் போராடமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரின் அபிவிருத்தி மற்றும் விரிவாக்கத்திற்குத் தடையாகக் காணப்படும் இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்றுவதுடன், பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதை வலியுறுத்தும் வகையில் இடம்பெற உள்ளது. இப்போராட்டம் பருத்தித்துறை துறைமுக சந்தியில் ஆரம்பமாகும் இப்போராட்டம், பேரணியாகச் சென்று பிரதேச செயலகத்தைச் சென்றடையவுள்ளது. இப்பகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் ஒன்றிணைந்துக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதிக்கான நீள்பயணம் – யாழில் இடம்பெற்ற பேரணி மற்றும் மாநாடு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள்பயணம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு 30.08.2026 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டை முன்னிட்டு, யாழ்ப்பாண நகரில் கவனயீர்ப்பு பேரணியும் இடம்பெற்றது. பேரணியின் முன்னிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் சென்றதுடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர். பின்னர் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், ரவிகரன் ஆகியோரும் உள்ளுராட்சி சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் கலந்துகொண்டனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், காணாமல்…
பிறவுன் றோட் ரயில்வே கடவை விவகாரம்: களத்தில் இறங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
யாழ்ப்பாணம், பிறவுன் றோட் 1ஆம் ஒழுங்கை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவையின் பாதசாரிகளுக்கான வழி மூடப்பட்டமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த பகுதியில் அமைந்திருந்த ரயில்வே கடவையின் பாதசாரிகள் பயன்படுத்தும் வழி திடீரென அடைக்கப்பட்டதால், அப்பகுதி மக்களும் மாணவர்களும் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் தகவல் அறிந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், பாதசாரிகள் கடவை தடுக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அசௌகரியங்கள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, பாதசாரிகளின் போக்குவரத்தை விரைவாக சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர்…
