யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றக் கோரி எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி கவனயீர்ப்புப் போராடமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரின் அபிவிருத்தி மற்றும் விரிவாக்கத்திற்குத் தடையாகக் காணப்படும் இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்றுவதுடன், பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதை வலியுறுத்தும் வகையில் இடம்பெற உள்ளது.
இப்போராட்டம் பருத்தித்துறை துறைமுக சந்தியில் ஆரம்பமாகும் இப்போராட்டம், பேரணியாகச் சென்று பிரதேச செயலகத்தைச் சென்றடையவுள்ளது.
இப்பகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் ஒன்றிணைந்துக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




