பொதுத்தேர்தல் விஞ்ஞாபனம்– 2015

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் பாராளுமன்றப்  பொதுத்தேர்தல் – 2015 தேர்தல் விஞ்ஞாபனம் பின்னணியும் அறிமுகமும் தமிழர் தேசத்தின் இறைமை காலனித்துவவாதிகளிடம் எமது இறைமையை இழக்கும் வரை, தமிழர் தேசம் இறைமையும் ஆட்சி உரிமையும் கொண்ட தனியான தாயகத்தை இலங்கைத்தீவில் வரலாற்றுரீதியாகக் கொண்டிருந்தது. முழு இலங்கைத்தீவும் 1833 இல் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது. இதன்போது, தமிழர் தேசத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்;துடன் ஒன்றிணைக்கப்பட்டது. 1948 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியிலிருந்து தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தமிழ்த்தேசத்தின் இறைமையும், ஆட்சியுரிமையும் தமிழ்தேச மக்களின் விருப்பமின்றி சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு மூலம் இத்தீவில் இனப் பிரச்சினைக்கு வித்திடப்பட்டது. உரிமை மறுப்பும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களும் 1957 ம் ஆண்டில் இருந்து…

2018 உள்ளூராட்சித் தேர்தல்

அன்புக்குரிய தமிழ் பேசும், சகோதர சகோதரிகளே! தமிழ்த் தேசிய இனம் வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கைத்தீவில் தனக்கெனத் தனியானதோர்; தாயகத்தையும் அதில் இறைமையையும் ஆட்சி உரிமையையும் தன்வசம் கொண்டிருந்தது. ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் முதலில் தனது இறைமையை இழந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1833 இல் முழு இலங்கைத்தீவும் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய மேலாதிக்கத்தால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்;துடன் ஒன்றிணைக்கப்பட்டது.பின்னர் 1948 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியில் இருந்து சிங்கள தேசத்தின் தயவில் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவிதி தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது.1957 ம் ஆண்டில் இருந்து காலத்திற்குக் காலம் தமிழ்த் தலைவர்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுடன் செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நிலப்பறிப்பு, குடியுரிமைப்…

தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் – 2017

அரசியல் தீர்வாக இரண்டு தேசங்கள் இணைந்த ஒரு நாடு. வடக்கு கிழக்கை பாராம்பரிய தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றைக் கொண்டிருப்பதனால் ஒரு தேசமாக உள்ளனர். ஒரு தேசத்திற்குரிய மக்களுக்கு பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையும், தனித்துவமான இறைமையும் உண்டு. மக்கள் கூட்டம் என்பது சிறுபான்மை இன மக்களையும், தேசமாக உள்ள மக்களையும் குறிப்பதால் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தினை கேள்விக்குட்படுத்தக்கூடிய வகையில் மக்கள் கூட்டம் என அழைப்பது பொருத்தமற்றது. தமிழ் மக்கள் தாம் ஒரு தேசம் என்பதற்கான ஆணையை 1956ம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் வெளிப்படையாக வழங்கி வருகின்றனர். தேசம் என்ற அந்தஸ்த்தினை அவர்கள் இதுவரை விட்டுக் கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் மறுபக்கத்தில் சிங்கள தேசத்தின் செயற்பாடுகள் பேரினவாதத்தின் உச்சத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில் தமிழ்…

பொதுத்தேர்தல் விஞ்ஞாபனம்– 2010