தம்பி விடுதலை விவகாரம்: கஜேந்திரனின் பதில்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் செல்வராஜா கஜேந்திரனின் தம்பி விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், 2009ஆம் ஆண்டு அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் இராஜதந்திரக் கேபிள் ஒன்று ஆதாரமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2009 ஏப்ரல் 23ஆம் திகதியிடப்பட்டு, விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 09COLOMBO457_a என்ற அமெரிக்கத் தூதரகக் கேபிளில், செல்வராஜா கஜேந்திரனின் சகோதரர் செல்வராஜா ரவீந்திரன் கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் பதிவாகியுள்ளன.
அந்தக் கேபிளின்படி, யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ். கஜேந்திரனின் சகோதரரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான செல்வராஜா ரவீந்திரன், 2009 மார்ச் 24ஆம் திகதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கஜேந்திரனின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ. பிளேக், மார்ச் 30ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவிடம் ரவீந்திரனை விடுவிக்க உதவுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், ஏப்ரல் 8ஆம் திகதி ரவீந்திரன் விடுவிக்கப்பட்டு தனது சகோதரரின் வீட்டுக்குத் திரும்பியதாகவும், விடுதலை செய்யப்பட்டதை கஜேந்திரன் அமெரிக்கத் தூதுவருக்குத் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தி நன்றி தெரிவித்ததாகவும் அந்த ஆவணம் பதிவு செய்கிறது.
மேலும், விடுதலைக்குப் பின்னர் ஏப்ரல் 21ஆம் திகதி அமெரிக்கத் தூதரகத்தைச் சந்தித்த ரவீந்திரன், தாம் கடத்தப்பட்டிருந்த காலத்தில் தாக்குதல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்ததாகவும் கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ரவீந்திரன் அமெரிக்கத் தூதரகத்திடம் தெரிவித்த தகவல்களாகவே ஆவணத்தில் பதிவாகியுள்ளன.
இந்த ஆவணம் வெளிப்படுத்துவது என்ன?
கஜேந்திரனின் தம்பி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், கஜேந்திரன் அமெரிக்கத் தூதுவரிடம் உதவி கோரியதும், அமெரிக்கத் தூதுவர் பசில் ராஜபக்ஷவிடம் தலையிட்டு விடுதலைக்கான கோரிக்கையை முன்வைத்ததும், அதன் பின்னர் ரவீந்திரன் விடுவிக்கப்பட்டதும் ஆவணத்தில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
எனினும், கஜேந்திரன் மஹிந்த ராஜபக்ஷவின் காலில் விழுந்தார் என்ற குற்றச்சாட்டை இந்தக் கேபிள் உறுதிப்படுத்தவில்லை. மாறாக, அமெரிக்கத் தூதுவரின் ஊடாக பசில் ராஜபக்ஷவிடம் விடுதலைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவே ஆவணம் தெரிவிக்கிறது.
இது தொடர்பான டக்ளசின் குற்றச்சாட்டுக்கு கஜேந்திரனின் பதில்
About The Author
Related posts:
2009 யுத்த நிறைவு காலப் பகுதியில் கஜேந்திரகுமார் எங்கிருந்தார்?
புதிய மதுபான சாலைக்கு அனுமதி எதற்கு? – கொதித்தெழுந்த மக்களோடு முன்னணி!
அருள்முருகன்_அறநெறிப் பாடசாலைக்கு புதிய தளபாடங்கள் கையளிப்பு!
3 மணிநேர தீவிர விசாரணை: யாழ். பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறினார் செல்வராசா கஜேந்திரன்!
தையல் மற்றும் புத்தகப் பை உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார் கஜேந்திரன்!
வெள்ளைக்கொடி விவகாரத்தில் நடந்தது என்ன? கஜேந்திரகுமார்
நஷ்டஈடும் இறப்புச் சான்றிதழும் தேவையில்லை: OMP-ன் நிகழ்வைப் புறக்கணித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி நல்லூரில் பிரகடனம்
‘நம் தேசம்’ இதழ் -01.08.26-15.08.26