பொதுத்தேர்தல் விஞ்ஞாபனம்– 2024
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டது.
கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் தேர்தல் விஞ்ஞாபனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், பிரசார செயலாளர் நடராஜர் காண்டீபன், கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.