கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், ரூபாய் 2,25,000 நிதிச் செலவில் அருள்முருகன் அறநெறிப் பாடசாலைக்கான தளபாடங்கள் இன்று 22/10/2026 கோப்பாய் பிரதேச செயலகத்தில் வைத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வா கஜேந்திரன் Ex MP அவர்களினால் பாடசாலைப் பொறுப்பாளர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய பேரவையின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தளபாடங்களை வழங்கி வைத்தனர்.

