தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களிடம், திருவுருவச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் 3 மணிநேர தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனர்.
விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளார்.