செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி விவகாரத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “நீங்கள் உண்மையாகவே இனவாதமற்ற ஒரு மாற்று அரசாங்கம் என்றால், செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணையை நடத்தி அதனை நிருபியுங்கள்” என நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதாகவும் அவர் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.