நஷ்டஈடும் இறப்புச் சான்றிதழும் வேண்டாம்!” — OMP நிகழ்வைப் புறக்கணித்து யாழில் கண்டனப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைத்து சுயாதீனமான சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணியொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியப் பேரவை மற்றும் குடிசார் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணி, செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகி, கோவில் வீதி வழியாக நகர்ந்து முத்திரைச் சந்தியிலுள்ள கிட்டு பூங்காவைச் (சங்கிலியன் பூங்கா) சென்றடைந்து பொதுக் கூட்டத்துடன் நிறைவடையும்.

பேரணியின் முக்கிய கோரிக்கைகள்:

சர்வதேச நீதி விசாரணை: செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேசக் கண்காணிப்பு மற்றும் நீதி விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்.

இனப்படுகொலைக்கு நீதி: தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை நடத்துதல்.

சர்வதேச பொறுப்புக் கூறல்: சர்வதேசப் பொறுப்புக் கூறல் பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குதல்.

உண்மை மற்றும் நீதி: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை நிலையை வெளிப்படுத்தி நீதியைப் பெற்றுத்தருதல்.

கைதிகள் விடுதலை: நீண்டகாலமாக சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்தல்.

இராணுவமயமாக்கல் நீக்கம்: வடக்கு-கிழக்கு பகுதியில் இராணுவமயமாக்கலை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருதல்.

நில உரிமை பாதுகாப்பு: தமிழ் மக்களின் பூர்வீக நில உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட இனப்பரம்பல் மாற்றங்களைத் தடுத்தல்.

பண்பாட்டு மற்றும் மத உரிமைகள்: தமிழ் மக்களின் தொன்மைமிக்க பண்பாட்டு, மத உரிமைகளைப் பாதுகாத்தல்.

சுயநிர்ணய உரிமை: ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச ரீதியில் அங்கீகரித்தல்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் நீதிக்கான குரலுக்கும் வலுச்சேர்க்கும் வகையில் அனைத்து குடிசார் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், கல்வி மற்றும் உயர்கல்வி சமூகத்தினர், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களை இந்தப் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அமைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment