யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி குமாரசுவாமி கிருஷாந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கடந்த செப்டம்பர் 07-ஆம் திகதி செம்மணி நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
1996-ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி, அவரது தாய், சகோதரன் மற்றும் அயலவர் ஆகியோரின் நினைவாக இந்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் கலந்துகொண்ட சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், பிரதிநிதிகள் மற்றும் உரிமையாளர்கள், கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு உரிய நீதியும் பொறுப்புக்கூறலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையும் பரிகார நீதியும் கிடைக்கப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற அநீதிகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக் கூடாது என்றும் நினைவேந்தலில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.



































