பிறவுன் றோட் ரயில்வே கடவை விவகாரம்: களத்தில் இறங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

யாழ்ப்பாணம், பிறவுன் றோட் 1ஆம் ஒழுங்கை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவையின் பாதசாரிகளுக்கான வழி மூடப்பட்டமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த பகுதியில் அமைந்திருந்த ரயில்வே கடவையின் பாதசாரிகள் பயன்படுத்தும் வழி திடீரென அடைக்கப்பட்டதால், அப்பகுதி மக்களும் மாணவர்களும் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் தகவல் அறிந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்தார்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், பாதசாரிகள் கடவை தடுக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அசௌகரியங்கள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, பாதசாரிகளின் போக்குவரத்தை விரைவாக சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

Related posts

Leave a Comment