வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள்பயணம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு 30.08.2026 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டை முன்னிட்டு, யாழ்ப்பாண நகரில் கவனயீர்ப்பு பேரணியும் இடம்பெற்றது. பேரணியின் முன்னிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் சென்றதுடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர். பின்னர் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், ரவிகரன் ஆகியோரும் உள்ளுராட்சி சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் கலந்துகொண்டனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், காணாமல்…
Month: August 2026
பொதுத்தேர்தல் விஞ்ஞாபனம்– 2015
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் – 2015 தேர்தல் விஞ்ஞாபனம் பின்னணியும் அறிமுகமும் தமிழர் தேசத்தின் இறைமை காலனித்துவவாதிகளிடம் எமது இறைமையை இழக்கும் வரை, தமிழர் தேசம் இறைமையும் ஆட்சி உரிமையும் கொண்ட தனியான தாயகத்தை இலங்கைத்தீவில் வரலாற்றுரீதியாகக் கொண்டிருந்தது. முழு இலங்கைத்தீவும் 1833 இல் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது. இதன்போது, தமிழர் தேசத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்;துடன் ஒன்றிணைக்கப்பட்டது. 1948 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியிலிருந்து தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தமிழ்த்தேசத்தின் இறைமையும், ஆட்சியுரிமையும் தமிழ்தேச மக்களின் விருப்பமின்றி சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு மூலம் இத்தீவில் இனப் பிரச்சினைக்கு வித்திடப்பட்டது. உரிமை மறுப்பும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களும் 1957 ம் ஆண்டில் இருந்து…
பிறவுன் றோட் ரயில்வே கடவை விவகாரம்: களத்தில் இறங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
யாழ்ப்பாணம், பிறவுன் றோட் 1ஆம் ஒழுங்கை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவையின் பாதசாரிகளுக்கான வழி மூடப்பட்டமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த பகுதியில் அமைந்திருந்த ரயில்வே கடவையின் பாதசாரிகள் பயன்படுத்தும் வழி திடீரென அடைக்கப்பட்டதால், அப்பகுதி மக்களும் மாணவர்களும் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் தகவல் அறிந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், பாதசாரிகள் கடவை தடுக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அசௌகரியங்கள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, பாதசாரிகளின் போக்குவரத்தை விரைவாக சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர்…
