தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகிய நாம், இரு தேசங்களின் கூட்டான- ஒரு நாடு என்கின்ற கோட்பாட்டினை முன்வைத்து அக்கொள்கையை அடைந்துகொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இன்று இலங்கைத் தீவினை மையமாக வைத்து ஒரு பூகோள அரசியல் போட்டி இடம்பெறுகின்றது. அந்தப் பூகோள அரசியலில் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு. அப்போட்டியூடாக தமிழர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமானது தமிழர்களுக்கான நிகரற்ற பேரம்பேசும் சக்தியாகும். அதனை அடிப்படையாக வைத்து, தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி சர்வதேச அரசியலை கையாளுமிடத்து தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளலாம் என்பது எமது திண்ணமான நிலைப்பாடு. தமிழ் மக்களின் நலன்கள், அவர்களது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, என்பவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படுவதன் மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும். இதனை சிறீலங்கா என்கின்ற வலுவான இனவாத சிந்தனை வயப்பட்ட தற்போதுள்ள அரச…
Day: August 23, 2010
மத்திய குழு
தலைவர் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாயர் – செல்வராசா கஜேந்திரன் பொருளாளர் – கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் தேசிய அமைப்பாளர் – தர்மலிங்கம் சுரேஸ் ஊடகச் செயலார் – கனகரட்னம் சுகாஸ் பிரசார செயலாளர் – நடராஜர் காண்டீபன் உபதலைவர்கள் – இராயப்பு எட்வேட் ஆனந்தராஜா துரைராஜா ஜோன்சன் இராஜகோன் ஹரிகரன் உப செலயாளர் – கோபாலபிள்ளை ஜெயபிரகாஸ்உப பொருளாளர் – இராசலிங்கம் கிருபாகரன்நிர்வாக செயலாளர் – நாகேந்திரன் சுகந்தன்இளைஞர் அணி – சுப்பிரமணியம் தவபாலசிங்கம்
பொதுத்தேர்தல் விஞ்ஞாபனம்– 2010
அன்புக்குரிய தமிழ் பேசும், சகோதர சகோதரிகளே! தமிழ்த் தேசிய இனம் வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கைத்தீவில் தனக்கெனத் தனியானதோர்; தாயகத்தையும் அதில் இறைமையையும் ஆட்சி உரிமையையும் தன்வசம் கொண்டிருந்தது. ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் முதலில் தனது இறைமையை இழந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1833 இல் முழு இலங்கைத்தீவும் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய மேலாதிக்கத்தால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்;துடன் ஒன்றிணைக்கப்பட்டது.பின்னர் 1948 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியில் இருந்து சிங்கள தேசத்தின் தயவில் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவிதி தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது.1957 ம் ஆண்டில் இருந்து காலத்திற்குக் காலம் தமிழ்த் தலைவர்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுடன் செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நிலப்பறிப்பு, குடியுரிமைப்…
