13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான கிட்டுபூங்கா பிரகடனம்!

13ஆம் திருத்தத்திற்குள் தமிழர்களின் அரசியல் தீர்வை முடக்கும் முயற்சிக்கு எதிராகப் பேரணி தமிழர்களின் அரசியல் தீர்வை 13ஆம் திருத்தச் சட்டத்திற்குள் முடக்கும் சதிக்கு எதிராகவும், தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வை வலியுறுத்தியும் நடைபெற்ற பேரணி, பல ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உரிமைக்கான எழுச்சியாகச் சிறப்பாக நடைபெற்றது. நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பமான பேரணி, கிட்டு பூங்கா வரை சென்று நிறைவடைந்தது. கிட்டு பூங்கா பிரகடனம் ‘தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ என்ற நோக்கத்துடன், தமிழ் மக்களினதும் வெகுஜன அமைப்புக்களினதும் பங்கேற்புடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 2022 ஜனவரி 30ஆம் திகதி கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது,…