யாழ்ப்பாணம் | 11 செப்டெம்பர் 2026
பலாலி பகுதியில் இடம்பெற்ற நிலவிடுவிப்புப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
2026 செப்டெம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற குறித்த போராட்டத்தில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் நடராஜர் காண்டீபன், பருத்தித்துறை நகரசபை முதல்வர் போல், கட்சியின் மூத்த உறுப்பினர் பொன்மாஸ்ரர் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டு மக்களுடன் போராட்டக்களத்தில் நின்றனர்.
பலாலி பகுதியில் பொதுமக்களின் காணிகளை மீளவும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், தமது காணி உரிமையை வலியுறுத்தி மக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.