சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, கல்முனையைச் சேர்ந்த அனோஜனின் விடுதலைக்காக பேதங்களைக் கடந்து அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என ஊடகப் பேச்சாளர் சுகாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அவர், அவரது விடுதலைக்கான முயற்சிகளில் அரசியல், சமூக மற்றும் தனிப்பட்ட பேதங்களைத் தாண்டி மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்புகள் கவனம் செலுத்தி, அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“பேதங்களைக் கடந்து, மனிதாபிமானத்தின் பேரால் ஒன்றிணைவோம்” என ஊடகப் பேச்சாளர் சுகாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.