1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த வைத்தியசாலைப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் நினைவாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவு ஸ்தூபி மற்றும் கொல்லப்பட்ட பணியாளர்களின் உருவப் படங்களுக்கு முன்னால் இந்நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு, உருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி தீபாவளித் தினத்தன்று யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய அமைதிப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் வைத்தியர்கள், செவிலியர்கள், வைத்தியசாலைப் பணியாளர்கள் மற்றும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் திகதி இந்த படுகொலை நாள் நினைவு கூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.