சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராஜா அனோஜனுக்கு மன்னிப்பும் விடுதலையும் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அம்பாறையைச் சேர்ந்த சிவராஜா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை (21.09.2026) மாலை 6 மணியளவில் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் மெழுகுச் சுடர் ஏந்தியவாறு இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
சிவராஜா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், அவருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு உரிய தரப்புகள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட முன்னணி உறுப்பினர்களும் பங்குகொண்டனர், சிவராஜா அனோஜனின் விடுதலைக்கான போராட்டத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியது.
மெழுகுச் சுடர்களை ஏந்தியவாறு பங்கேற்றவர்கள், மரண தண்டனை எதிர்நோக்கும் சிவராஜா அனோஜனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும், அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.