நினைவேந்தல்களை குழப்பும் பொலிஸார் பாராளுமன்றில் கஜேந்திரகுமார்!
தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளைக் குழப்பும் சிறிலங்கா பொலிஸாரின் செயற்பாடுகளையும், அனுர அரசின் அடக்குமுறைப் போக்கையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழர் தாயகத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் மக்களின் உரிமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் செயற்படுவது தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்ட அவர், இத்தகைய நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பதற்கும், அவற்றில் பங்கேற்கும் மக்களை அச்சுறுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
தமிழர் தாயகத்தில் நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்துவதுடன், பொலிஸாரின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இவ்விடயத்தில் முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கையாகும்.