இளஞ்சியாரணியம் அறநெறிப்பாடசாலைக்கு ரூ.2 இலட்சம் பெறுமதியான தளபாடங்கள் வழங்கிவைப்பு
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளஞ்சியாரணியம் அறநெறிப்பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் குறித்த அறநெறிப்பாடசாலையில் கல்வி பயிலும் 50 மாணவர்கள் பயனடையவுள்ளனர்.
ரூ. 200,000 (இரண்டு இலட்சம் ரூபாய்) பெறுமதியான தளபாடங்கள், இன்று தென்மராட்சி பிரதேச செயலகத்தில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் நேரடியாகப் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன.
மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
