தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அவரது தியாக வரலாற்றைச் சுமந்து செல்லும் நினைவுப் பேரணி ஊர்திப் பவனி அம்பாறை மாவட்டத்திலிருந்து நல்லூர் நினைவாலயம் நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தது தெரிந்ததே.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உணர்வுபூர்வமாகத் தொடங்கிய இந்த நினைவேந்தல் ஊர்திப் பவனி, வழியெங்கும் உள்ள தமிழ் பேசும் மக்களின் அஞ்சலிகளைப் பெற்றவாறு வடக்கு நோக்கி நகர்ந்து இன்று தலைநகரை வந்தடைந்தது.
தியாக தீபம் திலீபன் முன்வைத்த நியாயமான ஐந்து அம்சக் கோரிக்கைகளையும், அவரது அறவழிப் போராட்டத்தின் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஊர்திக்கு, செல்லும் வழியெங்கும் தாயக உணர்வாளர்களும் பொதுமக்களும் சுடரேற்றியும் மலர்தூவியும் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.