தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீராகாரமின்றி அறவழியில் தியாக தீபம் திலீபன் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய புனித நாளான 15.09.2026 அவரது 39ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் நல்லூரில் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், 39ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வின் முதலாம் நாள் காலை 9.45 மணியளவில், முன்னாள் போராளியும் மாவீரர் அறிவின் தந்தையுமான காக்கா அண்ணா அவர்களால் பொது ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வுகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.
திலீபன் தனது அகிம்சை வழிப் போராட்டத்தை ஆரம்பித்த அதே நேரத்தில் சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் உணர்வாளர்கள் மலரஞ்சலி செலுத்தி தமது வீரவணக்கத்தைத் தெரிவித்தனர்.


