தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவுசுமந்த ஊர்தி பவனி, பொத்துவிலில் இருந்து தனது பயணத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இருந்து ஆரம்பித்துள்ள இந்த நினைவு ஊர்தி பவனி, கிழக்கு மாகாணத்தின் முக்கிய பகுதிகள் வழியாக வடக்கு மாகாணத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளது.
அஞ்சலி செலுத்துவதற்காக வழிநெடுகிலும் திரண்டுள்ள பொதுமக்கள், மலர்தூவியும் சுடரேற்றியும் தங்களது உணர்வுபூர்வமான மரியாதையைச் செலுத்தி வருகின்றனர். வரும் நாட்களில் பல மாவட்டங்களைக் கடந்து, இறுதியாக நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தைச் சென்றடையவுள்ளது.