தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, “உயிர்காப்போம்” எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உன்னதமான இரத்ததான முகாம் இன்று நல்லூர் நினைவுத்தூபி வளாகத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இன்றைய தினம் (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இடம்பெற்ற இம்முகாமில், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் குருதிக்கொடை அளித்தனர்.
“ஒரு துளி குருதி, ஒரு மனித உயிரைக் காக்கும்” என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சேவை முகாமில், தியாகத்தின் நினைவாகப் பலரும் திரண்டு வந்து குருதிக்கொடை அளித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆபத்துக்காலங்களில் நோயாளிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், மருத்துவமனைகளில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் இத்தகைய உயிர்காக்கும் சேவைகள் பெரிதும் உதவியாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



