அநுரா அரசின் அடக்குமுறை அம்பலம்! தியாக தீபத்தின் நினைவிடத்தில் பொலிஸாரின் திட்டமிட்ட சதி!
அநுரா அரசின் அடக்குமுறை அம்பலம்! தியாக தீபத்தின் நினைவிடத்தில் பொலிஸாரின் திட்டமிட்ட சதி!
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் நிகழ்வில் பொலிஸார் நடந்துகொண்ட விதம், அவர்களின் திட்டமிட்ட அடக்குமுறைப் போக்கையும் பொய்முகத்தையும் தெட்டத்தளிவாக அம்பலப்படுத்தியுள்ளது!
உண்மைப் பின்னணியும் நடந்த சம்பவங்களும்:
சட்டவிரோதப் பறிமுதல் (செப்டம்பர் 18): கடந்த 18ஆம் திகதி, நினைவிடத்தில் மிகக் குறைந்த சத்தத்தில் ஒலிக்கப்பட்ட சிறிய பொக்ஸ்கள் (Boxes) மற்றும் ஆம்ப்ளிஃபையர்களை (Amplifiers) பொலிஸார் அராஜகமாகத் தூக்கிச் சென்றனர்.
ஆரம்பத்தில் விண்ணப்பத்தை ஏற்க மறுப்பு: ஒலிபரப்பிற்காக முறையான அனுமதி கோரி பொலிஸாரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டபோதும், அதை ஏற்க மறுத்துப் பொலிஸார் திருப்பி அனுப்பினர்.
பாராளுமன்ற உறுப்பினர் தலையீடு: பாராளுமன்ற உறுப்பினர் Gajendrakumar Ponnambalam (கஜேந்திரகுமார் பொன்னம்பலம்) அவர்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகரைத் (ASP) தொடர்பு கொண்டு பேசிய பின்னரே, பொலிஸார் அந்த விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டனர்.
ஏற்றுக்கொண்ட பின்னரும் ஏமாற்று வித்தை: விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், இதுவரை ஒலிபரப்பிற்கான அனுமதியை வழங்கவுமில்லை; பறிமுதல் செய்து கொண்டு சென்ற பொக்ஸ்கள் மற்றும் சாதனங்களைத் திருப்பித் தரவுமில்லை!
முறைப்பாடு: பொலிஸாரின் இந்தத் திட்டமிட்ட அராஜகத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRC) அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுமதி வழங்க முடியாது என்றால், அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாகத் தருமாறு கோரப்பட்டுள்ளது.
இத்தனை வருடங்களாக இல்லாத கெடுபிடிகளைத் தற்போது புகுத்தி, தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை முடக்கத் துடிக்கும் இந்த அநுரா அரசின் அடாவடிக்கு எதிராகச் சனநாயக வழியில் எமது கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்!