இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராய் நடந்தது திட்டமிடப்பட்ட இனப்படுகொலையே என்றும், அதை அன்றைய மற்றும் இன்றைய இலங்கை அரசாங்கங்களே முன்னெடுத்தன என்றும் சர்வதேச அரங்கில் உரக்கக் குரல் கொடுத்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர்,
தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் சாதாரண மனித உரிமை மீறல்கள் அல்ல, அவை இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையே என்பதை சர்வதேச சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றிய அவர், தமிழ் மக்கள் எதிர்கொண்ட அநீதிகளையும், அவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கப்பெறாத சூழலையும் உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.
தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் நீதியையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைந்த இவரது உரை, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட குரலாக சர்வதேச அரங்கில் எதிரொலித்துள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நீதி கிடைக்காது என்பதை சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச விசாரணை மட்டுமே தமிழ் மக்களுக்கு உண்மையான நீதியைப் பெற்றுத் தரும் என்பதையும் உறுதியாக வலியுறுத்தினார்.