தமிழக கட்சிகளுடனான சந்திப்பு
இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கமினிசியக்கட்சி,மாணவர் கூட்டமைப்பு உட்பட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது, ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. குறிப்பாக, ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ்த்தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் அடிப்படையிலான சமஷ்டி அரசியல் தீர்விற்கு இந்திய அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தமிழர் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், அதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டியதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன், இந்திய மற்றும் இலங்கை தமிழ் மீனவர்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைதாண்டிய மீன்பிடிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியதன் அவசியம், தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வாதார மற்றும் உரிமைகள் தொடர்பான விடயங்கள் ஆகியனவும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான நீதியான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி குழுவொன்றை அமைத்து, ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டுமென கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில்,
தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,
ஜனநாயக தமிழரசுக் கட்சியின் தலைவர் சனாதிபதி சட்டத்தரணி கே. தவராசா,
தமிழ் தேசியப் பேரவையின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ்,
சிரேஷ்ட சட்டத்தரணியும் பேச்சாளருமான கனகரத்தினம் சுகாஷ்
மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.









