நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் இடம்பெற்ற மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வில், மாவீரர் எழுச்சியன் அவர்களின் சகோதரி திருமதி கல்பனா அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.
சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த தாயக உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் தியாக தீபத்தின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி தமது உணர்வுபூர்வமான வணக்கத்தைச் செலுத்தினர்.
நல்லூர் நினைவாலயத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்நிகழ்வில், தாயக உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து தியாக தீபத்திற்குச் சுடரஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.