அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவருமான தேசப்பற்றாளர் இராஜப்பு எட்வேட் ஆனந்தராஜா அவர்கள் காலமானார்.
அன்னாரது மறைவையடுத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அன்னாரின் திருவுடலுக்கு நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் தமிழ் தேசியத்தின் வழியிலும் இறுதிவரை உறுதியோடு பயணித்த அன்னாரின் மறைவு, தமிழ் தேசிய அரசியல் தளத்திற்கு பேரிழப்பாகும் என கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்னாரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
