மட்டக்களப்பு, துறைநீலாவணைப் பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் மக்கள் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, துறைநீலாவணைப் பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது அப்பகுதி மக்களின் தற்போதைய கள நிலவரங்கள், அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் தொடர்ச்சியாகப் பணியாற்றவுள்ளதாக கட்சிப் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.