தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களுடைய சந்திப்பு
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு வேல்முருகன் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் 19-12-2025 பி.ப 2.25 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 3.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது.
தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை
தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவை அங்கீகரிக்கப்படும் வகையில் சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்காக ஒருங்கிணைந்து குரல் கொடுத்து, அரசியல் ரீதியாகச் செயலாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், ஏக்கிய இராச்சியக் கொள்கையின் அடிப்படையிலான அரசியலமைப்பு ஏற்பாடுகளை நிராகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஈழத்தமிழ் கடற்றொழிலாளர் பிரச்சினை
ஈழத்தமிழ் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியமும் இச்சந்திப்பில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது. தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவமும் பேசப்பட்டது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எழுத்துமூலம் கையளிப்பு
தமிழ்த் தேசியப் பேரவையினருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இடையில் முன்னதாக இடம்பெற்ற சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கைகளும் எழுத்துமூல ஆவணங்களும் இச்சந்திப்பில் கையளிக்கப்பட்டன. குறித்த அறிக்கைகள் இச்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பங்கேற்றோர்
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பின்வருவோர் கலந்துகொண்டனர்:
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – நாடாளுமன்ற உறுப்பினர்
பொ. ஐங்கரநேசன் – தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்
செல்வராசா கஜேந்திரன் – செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
த. சுரேஸ் – தேசிய அமைப்பாளர்
க. சுகாஷ் – சிரேஷ்ட சட்டத்தரணி, உத்தியோகபூர்வ பேச்சாளர்
ந. காண்டீபன் – சிரேஷ்ட சட்டத்தரணி, பிரசாரச் செயலாளர்
தமிழர் தேசிய உரிமைகள், அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் ஈழத்தமிழர் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கைகளின் அவசியத்தை முன்னிறுத்தும் வகையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.