சிலை அகற்றும் விவகாரங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பாகத் தமிழர்களை முட்டாள்களாகப் பாவித்துச் செயற்படும் போக்கு எதற்காக எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
ஐபிசி தமிழ் (IBC Tamil) ஊடகத்தின் ஊடக விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதி, தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் உணர்வுகள் சார்ந்த விவகாரங்களில் தொடர்ச்சியாக நடக்கும் அடாவடித்தனங்களைச் சுட்டிக்காட்டினார்.
நாம் உழைப்புடனும், மக்கள் நலனுக்காகவும் போராடும் வேளையில், எமது உரிமைகள் வளைக்கப்படுவதையும், சிலைகள் அகற்றப்படுவதையும் வெளிநாட்டு அமைப்புகளோ அல்லது சர்வதேச நாடுகளோ மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்றில்லை என்று அவர் குறிப்பிட்டார்.